SI பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 29, 2022

Comments:0

SI பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது

amilnadu-uniformed-services-recruitment-board-announced-written-examination-results-for-sub-inspector-recruitment
tnusrb.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தகுதி பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

முன்னதாக, தமிழக காவல்துறையில் 444 சார்பு ஆய்வாளர்கள் (தாலுக்கா, ஆயுதப்படை) பதவியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு பொது விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 25ம் தேதியும், காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 26ம் தேதியும் நடைபெற்றது.

முதன்மை எழுத்துத் தேர்வு, உடல் திறன் போட்டி, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெற்றது. முதல் பிரிவில் தமிழ் மொழி தகுதித் தேர்வாகவும், இரண்டாவது பிரிவு பொது அறிவு மற்றும் உளவியல் தேர்வாகவும் நடைபெற்றது.

எழுத்துத் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக பொது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களும், துறை விண்ணப்பதாரர்கள் 30 மதிப்பெண்களும் பெறவேண்டும். இருப்பினும், அடுத்த கட்டத் தேர்வான அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கையில் 1:5 என்ற விகிதாச்சாரப்படி விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.

இதே போன்று நேர்காணலுக்கு, மொந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 1:2 என்ற விகிதாச்சாரப்படி விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி:

tnusrb.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவு

இப்போது, List of candidates eligible for next phase of selection (Enrolment No. wise) என்பதைக் கிளிக் செய்யவும். பொது விண்ணப்பதாரர்கள், துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் எனத் தனித்தனியாக தேர்வு முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை கிளிக் செய்தால் தகுதியானவர்கள் பட்டியல் கணினித் திரையில் தோன்றும். தகுதி பட்டியலை அச்சிட்டு (அ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வகுப்புவாரி இடஒதுக்கீடு ரீதியாக தகுதியானவர்கள் பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ள List of candidates eligible for next phase of selection (Roster wise) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84635921