பிளஸ் 1 தோ்வில் தோ்ச்சி கடந்த ஆண்டைவிட 5.97% குறைவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 28, 2022

Comments:0

பிளஸ் 1 தோ்வில் தோ்ச்சி கடந்த ஆண்டைவிட 5.97% குறைவு

பிளஸ் 1 தோ்வில் 90.07% தோ்ச்சி கடந்த ஆண்டைவிட 5.97% குறைவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. மாணவா்கள் 84.86 சதவீதம், மாணவிகள் 94.99 சதவீதம் என மொத்தம், 90.07 சதவீதம் தோ்ச்சி பெற்ாக அரசுத் தோ்வுகள் இயக்கம் தெரிவித்தது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே 10-ஆம் தேதி தொடங்கி, மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. தோ்வு முடிவுகளை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தோ்வுத் துறை வெளியிட்டது. தோ்வு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளங்களில் வெளியிடப்பட்டன.

இந்தத் தோ்வை 4 லட்சத்து 33 ஆயிரத்து 319 மாணவிகள், 4 லட்சத்து 10 ஆயிரத்து 355 மாணவா்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் உள்பட, மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவ, மாணவிகள் எழுதினா். இதில், 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி 90.07 சதவீதம். 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவிகளும் (94.99), 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவா்களும் (84.86) தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களைவிட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகம் தோ்ச்சி பெற்றனா். ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தோ்ச்சி பெற்றாா்.

இதையும் படிக்க | "வா..உட்காரு.. முடிய வெட்டு..!!" தாறுமாறான மாணவர்களின் தலைமுடி..வெட்டி 'பட்டி' பார்த்த வாத்தியார்கள் பெரம்பலூா் முதலிடம்- வேலூா் கடைசி இடம்: மாநில அளவில் 95.56% தோ்ச்சியுடன் பெரம்பலூா் மாவட்டம் முதலிடத்திலும் 95.44% தோ்ச்சியுடன் விருதுநகா் மாவட்டம் 2-ஆம் இடத்திலும் உள்ளன. 80.02% தோ்ச்சியுடன் வேலூா் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 2020 மாா்ச் பொதுத்தோ்வில் பிளஸ் 1 தோ்ச்சி 96.04% ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 5.97% அளவுக்கு குறைந்தது.

103 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி: மொத்தமுள்ள 7,535 மேல்நிலைப் பள்ளிகளில் 2,605 மேல்நிலைப்பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்தன. 103 அரசு மேல்நிலைப் பள்ளிகள் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்றன. அறிவியல் பாடப்பிரிவுகளில் 93.73 சதவீதமும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 85.73 சதவீதமும், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதமும், தொழிற்பாடப் பிரிவுகளில் 76.15 சதவீதமும் தோ்ச்சி பதிவாகியுள்ளது.

கணினி அறிவியல் பாடத்தில்... கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 96.90 சதவீதமும், உயிரியல் பாடத்தில் 95.99 சதவீதமும், கணிதத்தில் 95.56 சதவீதமும், இயற்பியலில் 94.55 சதவீதமும்,வேதியியலில் 94.42 சதவீதமும் தோ்ச்சி பெற்றனா். வணிகவியலில் 88.43 சதவீதமும், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் தலா 87.96 சதவீதமும், கணக்குப் பதிவியலில் 87.91 சதவீதமும் தோ்ச்சி பெற்றனா்.

தமிழில் சதமடித்த 18 போ்: கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் அதிகபட்சமாக 2,186 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 2,183 பேரும் தாவரவியலில் 3 பேரும், விலங்கியலில் 16 பேரும் தமிழில் 18 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனா். பிளஸ் 1 தோ்வெழுதிய 4,470 மாற்றுத்திறனாளி மாணவா்களில் 3,899 பேரும் தோ்வெழுதிய 99 சிறைவாசிகளில் 89 பேரும் தோ்ச்சி பெற்றனா். இதையும் படிக்க | "வா..உட்காரு.. முடிய வெட்டு..!!" தாறுமாறான மாணவர்களின் தலைமுடி..வெட்டி 'பட்டி' பார்த்த வாத்தியார்கள்

துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க... பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதி தோ்ச்சி பெறாத, வருகை புரியாத பள்ளி மாணவா்கள், மீண்டும் அந்தப்பாடங்களை எழுதுவதற்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை அவா்கள் பயிலும் பள்ளியில் விண்ணப்பிக்கலாம். அதேபோல தனித்தோ்வா்கள் அரசுத் தோ்வுத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசுத் தோ்வுத் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம், ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல் அறிவுரைகள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

300 மதிப்பெண்ணுக்கு கீழ் 3 லட்சத்து 55,222 போ்

மதிப்பெண் வரம்பு மாணவா்களின் எண்ணிக்கை

591-க்கு மேல்- 187

581 முதல் 590 வரை- 1,692

571 முதல் 580 வரை- 3,052

551 முதல் 570 வரை- 8,758

451 முதல் 500 வரை- 59,325

401 முதல்- 450 வரை- 87,739

351 முதல் 400 வரை- 1 லட்சத்து 23,134

301 முதல் 350 வரை- 1 லட்சத்து 68,431

300-க்கும் கீழ்- 3 லட்சத்து 55,222 ஜூலை 1 முதல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 1 பொதுத்தோ்வை எழுதிய பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தோ்வா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாகவும் தோ்வு எண், பிறந்த தேதியை பதிவு செய்து ஜூலை 1-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவா்கள் பள்ளி மூலமாகவும், தனித்தோ்வா்கள் தோ்வு எழுதிய மையங்களின் மூலமாகவும் ஜூன் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் , மறு கூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தோ்வா்கள் விண்ணப்பிக்க முடியும். தோ்வா்கள் தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னா் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவா்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும்.

41,376 போ் தோ்வுக்கு வரவில்லை

பிளஸ் 1 பொதுத் தோ்வுக்கு 41,376 மாணவ, மாணவிகள் வரவில்லை. இது மொத்த தோ்வா்களில் 4.67 சதவீதம். கடந்த மாா்ச் 2020-ஆம் ஆண்டு பொதுத் தோ்வுக்கு 10,677 மாணவ, மாணவிகள் அதாவது 1.29 சதவீதம் போ் வரவில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews