SBI வீட்டுக்கடன் வட்டி விகித உயர்வு ஜூன் 1 முதல் அமல்? - EMI அதிகரிக்க வாய்ப்பு ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 23, 2022

Comments:0

SBI வீட்டுக்கடன் வட்டி விகித உயர்வு ஜூன் 1 முதல் அமல்? - EMI அதிகரிக்க வாய்ப்பு ?

SBI வீட்டுக்கடன் வட்டி

வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை எஸ்.பி.ஐ அண்மையில் உயர்த்தியது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்டிருந்த அறிவிப்பில், கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது.

7.20% ஆக அதிகரிப்பு

இந்நிலையில், தற்போது மீண்டும் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்ததைத் தொடர்ந்து 7.20% ஆக அதிகரித்துள்ளது. இதுபோல் மூன்று மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் 3 மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் 10 பி.பி.எஸ் அதிகரித்து 6.85% ஆகவும், ஆறு மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் 7.15% ஆகவும் அதிகரித்துள்ளது.
EMI அதிகரிக்க வாய்ப்பு ?

பெரும்பாலான கடன்கள் ஓராண்டு எம்.சி.எல்.ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும். இதன்காரணமாக, தனிநபர், வீடு, வாகன கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணையான இ.எம்.ஐ அதிகரிக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் மீதானEBLR வட்டி விகிதம் 6.65% ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது EBLR வட்டி 0.50% உயர்த்தப்பட்டு 7.5% ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews