Breaking

Monday, May 23, 2022

பிளஸ் 2 மாணவன் தற்கொலை

பெரம்பூர்: சென்னை அயனாவரம் முத்தம்மன்நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் திலீப்குமார் (18). இவர் அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மதுரவாயில் பகுதியில் உள்ள தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்த்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். இதன்பிறகு திலீப்குமார் தனது அறைக்கு தூங்க சென்றார். காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பலமுறை பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது தூக்கில் திலீப்குமார் பிணமாக கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அயனாவரம் போலீசார் சென்று திலீப்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தேர்வு சரியாக எழுதாததால் தூக்கிட்டு தற்கொலை செய்தாரா வேறு ஏதாவது காரணமா என்று விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog