திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 14, 2022

Comments:0

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலரின் செயல்முறைகள்

பார்வையில் கண்ட அறிவுரைகளின்படி கீழ்க்காண் அறிவுரைகள் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

1. அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு 14.05.2022 இன்று 13.05.2022 உடன் முதல் மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு விடுமுறை வரை பயிலும் பெறுவதால், நாளை கோடை அளிக்கப்படுகிறது

2.அனைத்து வகை அரசு / அரசுஉதவிபெறும் / சுயநிதிப் பள்ளிகளில் விடைத்தாட்கள் திருத்துதல் 1 முதல் 9 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் (தொடக்க மற்றும் நடுநிலை/ உயர் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் மற்றும் தேர்ச்சியறிக்கை பதிவேடு தயாரித்தல் போன்ற பணிகளை முடித்திட ஏதுவாக பள்ளி ஆசிரியர்கள் 20.05.2022 வரை பள்ளிகளுக்கு வருகைபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பணியாற்றும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்கள்

3. அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் சுயநிதிப் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவு விவரம் EMIS இணையத்தில் உள்ள பதிவுகளுடன் ஓத்திருப்பதை சரிபார்க்க வேண்டும். இரண்டு பதிவுகளும் வேறுபடும். பட்சத்தில் அவற்றை சரிசெய்ய வேண்டும் மேலும் அவை இரண்டும் சரியாக உள்ளது என்பதற்கான சான்றினை பள்ளித் தலைமையாசிரியர் அந்தந்த வட்டாரக் கல்விஅலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 4. அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் ஆசிரியர்கள் தேர்வுப்பணி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மேற்காண் அறிவுரை பொருந்தும் தேர்வுப்பணியில் உள்ள முடிந்தவுடன் இப்பணியை மேற்கொள்ளலாம். 20.05.2022க்குள் இப்பணியை முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

5. மேலும் முன்னரே துறைத் தலைவரின் அனுமதி பெற்று வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ள ஆசிரியர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மேற்காண் பணிகளை முடிப்பதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

6.நாளை 14,05.2022 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

7.இதுசார்ந்து கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews