அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, பொது மன்னிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 14, 2022

Comments:0

அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, பொது மன்னிப்பு

அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

engage-in-activities-against-teachers-in-government-schools
கடந்த இரண்டு மாதங்களாக, அரசு பள்ளி மாணவ, மாணவியர் சிலரின் அட்டகாசங்கள், பெற்றோரையும், கல்வியாளர்களையும் கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த பிரச்னை எல்லை மீறி சென்றதால், ரகளையில் ஈடுபடும் மாணவ - மாணவியர் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுவர் என்றும், அவர்களது மாற்று சான்றிதழான டி.சி.,யில் 'மோசமான நடத்தை' என குறிப்பிடப்படும் என்றும், அரசு அறிவித்தது.

ஆனால், இந்த நடவடிக்கை மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து, அவர்களை சமூக விரோதிகளாக மாற்றும் ஆபத்து உள்ளதாக, கல்வியாளர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, தற்போது ரகளையில் ஈடுபட்டு சிக்கியுள்ள மாணவ - மாணவியருக்கு பொது மன்னிப்பு வழங்கவும், டி.சி.,யில் நடத்தையை குறிப்பிட வேண்டாம் என்றும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84631381