நாளை (18.04.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 17, 2022

Comments:0

நாளை (18.04.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அரியலூரில் திங்கட்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Holidays-for-school-and-college


நாளை பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பங்குனி , சித்திரை மாதங்களில் அனைத்து ஆலயங்களிலும் திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. திருவிழா நடைபெறும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்கும். இதற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை, ஏப்ரல்18ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அரசுப்பள்ளிகள், அலுவலககங்கள், நிறுவனங்களுக்கு பொருந்தும். அதே நேரத்தில் இந்த உத்தரவு தேர்வுகள் நடைபெறும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Holidays-for-school-and-colleges

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602040