பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் பேரணி நடத்தினர்.
மத்திய அரசின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் 2003ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு நெருங்கும் நிலையில் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று பேரணி நடத்தப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துசாமி மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கல்ஸ் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.