புதுப்பிக்கும் கட்டணம்
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய, வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும் கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் வகையில், பழைய வாகனங்களை அழிக்கும் சட்டத்தை அமல்படுத்தும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதை வாகன உரிமையாளர்களும், மாநில அரசுகளும் எதிர்த்து வருகின்றன. இதனால், அந்த சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தகுதிச் சான்றை புதிப்பிக்க வேண்டும்
இந்நிலையில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் தகுதிச் சான்றை புதுப்பிக்கும் கட்டணம், நேற்று முதல் பல மடங்கு அதிகரித்து உள்ளது. அதாவது, வாகனம் வாங்கியது முதல் எட்டாண்டுகள் வரை, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை; ஒன்பதாம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதிச் சான்றை புதிப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்நிலையில், 15 ஆண்டுகள் ஆன வாகனங்களுக்கான தகுதிச் சான்று கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம், 1,800 ரூபாய்; மூன்று சக்கர வாகனம், 5,000; இலகு ரக வாகனம், 9,100; மத்திய ரக வாகனம், 14 ஆயிரத்து 300; கன ரக வாகனங்களுக்கு, 15 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாமத கட்டணமாக ஒவ்வொரு நாளும், 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.