டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ல் எழுத்து தேர்வு அடிப்படையில் மோட்டார் வாகன கிரேட்-2 ஆய்வாளர்கள் 226 பேருக்கான தேர்வு பட்டியலை அறிவித்தது. அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்காக அழைப்பும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வை எதிர்த்தும், எழுத்து தேர்வு மதிப்பெண்களை வெளியிடக்கோரியும் தேர்வில் வெற்றி பெறாத 54 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியலை நேர்காணலுக்கு முன்பு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வாணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, தேர்வு நடைமுறைகள் பாதியில் உள்ளன. நேர்காணல் முடிவடையாத நிலையில் எழுத்து தேர்வு முடிவுகளை வெளியிடுவது நியாயமான தேர்வை பாதிக்கும் என்று வாதிட்டார். எழுத்து தேர்வில் தேர்ச்சை பெறாதவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வாதிடும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | அரசுப் பள்ளிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கில மொழி.
அப்போது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நேர்காணலுக்கு முன்பு எழுத்து தேர்வு மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், இதே கோரிக்கைகளுடன் நிலுவையில் உள்ள வழக்குகளையும் சேர்த்து தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.