போராட்டத்திற்கு தள்ளும் பட்ஜெட்: பட்டதாரி ஆசிரியர் கழகம் விமர்சனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 22, 2022

Comments:0

போராட்டத்திற்கு தள்ளும் பட்ஜெட்: பட்டதாரி ஆசிரியர் கழகம் விமர்சனம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத் தின் நிறுவனத் தலைவர் முனைவர் அ. மாய வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது;

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறைக்கு இவ்வாண்டிற்கு ரூ.36.895.95 கோடி ஒதுக்கி இருப்பது நல்ல அம்சம். இந்தத் தொகை கடந்த ஆண்டு 'ஒதுக்கி இருந்ததை விட ரூ.4.296.35 கோடி அதிகமாக ஒதுக்கி இருப்பது பாராட்டப்படவேண்டிய சிறப்பு அம்சமாகும். அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரைப் பயின்று கல்லூரிக் ளில் சேரும் மாணவிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் அவர்கள் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு பெண்கள் உயர்கல்விப் பெறுவதை ஊக்கு விக்கும், அதே நேரத்தில் மாணவிகள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கும் துணைபுரியும் என்பதால் இந்த அறிவிப்புக் களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

இதையும் படிக்க | TNPSC - PRESS RELEASES - 22.03.222 - ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER (THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE) (Counselling)

பழைய ஓய்வூதியத் திட்டம்

ஆனால், அதே நேரத்தில், ஆசிரியர்- அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டா கவே உள்ளது. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஜீவாதாரக் கோரிக்கையான 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை' மீண்டும் தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்துவோம் என்று வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் உறுதி அளித்து வந்தார். அத்தகையவர் இன்று தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று 10 மாதங்கள் உருண்டோடிய பிறகும் அந்த கோரிக்கையை எப்பொழுது நிறை வேற்றுவோம் என்று ஒன்றும் சொல்லா மல் இருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனை யையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவருடைய இந்த மௌனம் எங்களை மீண்டும் போராட்டக் களத்திற்கு தள்ளி விடுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது. ஆகவே முதல்வர் அவர்கள், இந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் தொடங்கும் இச்சமயத்திலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக அமல் படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 22.03.2022 - PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews