`நீட்' தேர்வு விவகாரம்: ஸ்டாலின் நம்பிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 18, 2022

Comments:0

`நீட்' தேர்வு விவகாரம்: ஸ்டாலின் நம்பிக்கை

:''நீட் தேர்வில் இருந்து, இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகன் விநீத் நந்தன் - அக் ஷயா கவுசிக் திருமணம், சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது. திருமணத்திற்கு தலைமை வகித்து, மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும்; அதற்கு சட்ட முன்வடிவை சட்டசபையில் இயற்றி, நாம் கவர்னருக்கு அனுப்பி வைத்தோம்.பல மாதங்கள் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்கு பின், திடீரென ஒரு நாள் அதை திருப்பி அனுப்பி வைத்து விட்டனர். உடனே சட்டசபையை கூட்டி, மீண்டும் ஒரு தீர்மானத்தை போட்டு, மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தோம்.


நானும், துரைமுருகன், பொன்முடி, தலைமை செயலர் மற்றும் அதிகாரிகள் எல்லாம் கவர்னரை சந்தித்து, அந்த கோப்பை பற்றி விசாரித்தோம்.அப்போது, 'எனக்கு சட்டம் தெரியும். இரண்டாவது முறை நான், அதை திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாது. நான் ஜனாதிபதிக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும்; வேறு வழி கிடையாது' என, கவர்னர் கூறினார்.


எனவே, முதற்படியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். விரைவில், நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார். "I am confident that this country will be liberated from the NEET test," said Chief Minister Stalin.


Minister of Municipal Administration K.N. Vineet Nandan, son of Nehru's brother Ramajayam, got married to Akshaya Kaushik at Thiruvanmiyur in Chennai yesterday. Chief Stalin presided over the wedding and greeted the bride and groom:


The educational dream of poor, simple, middle class students should be exempted from the NEET exam; We drafted the bill in the Assembly and sent it to the Governor. It had been lying dormant for several months. After that, all of a sudden one day they sent it back. We immediately convened the assembly, put a resolution back and sent it back to the governor.


Me, Thuraimurugan, Ponmudi, the Chief Secretary and officials all met the Governor and inquired about the file.Then, 'I know the law. The second time I, I can not send it back to you. I have to send it to the President; There is no other way ', the governor said.


So, we have succeeded in the first step. Soon, I am confident that this country will definitely be liberated from the NEET test.Thus he spoke.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84423605