மாணவ, மாணவியர் நலத்திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 19, 2022

Comments:0

மாணவ, மாணவியர் நலத்திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம்

நரிக்குற வர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் நல வாரியத் தில் பதிவு செய்த உறுப் பினர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு நரிக் குறவர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் விபத்தினால் மரணம் அடைந்தால் ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற் பட்டால் ஊனத்தின்தன் மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை யும், இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20 ஆயி ரம் மற்றும் ஈமச்சடங்கு செலவினம் ரூ.5 ஆயிரம் சேர்த்து ரூ.25 ஆயிரம்,

கல்வி உதவித்தொகையாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500ம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.ஆயி ரம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் ஐ.டிஐ படிப்பிற்கு ரூ.ஆயிரம். பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பிற்கு ரூ.ஆயிரத்து 500ம், பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பட்டப்படிப்பிற்கு ரூ.4 ஆயிரம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிக ளைப் பெற நலவாரிய உறுப்பினராக பதிவு செய்ய நரிக்குறவர் இனத் தைச்சார்ந்தவர் என்பதற் கான சான்று பெற்றிருக்க வேண்டும். நலத்திட்ட உத விகளுக்காக நிர்ணயிக்கப் பட்ட படிவத்தில் உதவித் தொகை பெறுவதற்கான சான்றுகளுடன் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சிவகங்கைமாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews