அண்ணா பல்கலைக்கழக தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக வெளியிட்டிருந்தது. ஆன்லைனில் நடைபெறும் இந்த செமஸ்டர் தேர்வானது பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் முதல் வாரம் நிறைவடையும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறி இருந்தது.
இந்நிலையில் அந்த தேர்வுகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அரியர் எழுதும் மாணவர்கள், இறுதியாக பயின்ற கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வு அனுமதி சீட்டை பெறலாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் க்ளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. தேர்வு எழுதிய விடைத்தாள்களை அஞ்சல், கொரியர் மூலம் மட்டுமே மாணவர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறி இருக்கிறது. விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாட பெயர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Search This Blog
Tuesday, January 25, 2022
Comments:0
அண்ணா பல்கலைக்கழக தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.