தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.
கரோனா சூழல் சீரான பிறகு எழுத்துத் தேர்வுகள் நடைபெறும். தற்போது திட்டமிட்டபடி செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.