அதிருப்தியான செயல்களை பிடிவாதத்துடன் செய்வதா ? பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் கூட்டணி கேள்வி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 18, 2022

Comments:0

அதிருப்தியான செயல்களை பிடிவாதத்துடன் செய்வதா ? பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் கூட்டணி கேள்வி!

தமிழக ஆசிரியர் கூட் டணியின் மூத்த தலைவ ரும். அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) செயலாள ருமான அண்ணா மலை, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமாருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணையில் நடைமு றையில் இருந்த 'மலை சுழற்சி அரசாணை 404' ரத்து செய்யப்பட்டது. இதனால் 42 பகுதிகளில் மலை சுழற்சியால் 3 ஆண் டுகளாக பாதிக்கப்பட் டுள்ள பெண் ஆசிரியர்கள் உட்பட இரண்டாயிரத்துக் கும் மேற்பட்டோர் சாதாரண பகுதிகளில் பணியாற்ற வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது. இதுகு றித்து தமிழக ஆசிரியர் கூட்டணி உங்களது கவ னத்துக்கு கொண்டு வந்த தால், திருந்திய அரசாணை வெளியிட்டு பாதிக்கப் பட்ட ஆசிரியர்கள் பாது காக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட இணக் கமான சூழ்நிலையில், கரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் வலுவூட்டல் பயிற்சியை ஒத்திவைக்க வலியுறுத்தி இருந்தோம். ஆனால், சிலரின் பிடிவா தத்தால் மாநிலம் முழுவ தும் பல்வேறு மாவட்டங் களில் பயிற்சிக்கு சென்ற ஆண், பெண் ஆசிரியர்கள், தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களு டன் அந்த அறையில் இருந்த அனைவரும் தனி மைப்படுத்தப்பட்டுள்ள னர். மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம். மற்ற துறை களை விட பள்ளிக்கல் வித்துறையில்தான் இது போன்ற அதிருப்தியான செயல்களை பிடிவாதத்து டன் செய்து காட்டி ஆட்சி க்கு எதிரான வெறுப்புணர் வினை ஏற்படுத்தி வரு கின்றனர். எனவே, இந்த வலுவூட்டல் பயிற்சியை கரோனா தொற்று குறை யும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். பிள்ளைகள் பள்ளியில் இல்லை, பள்ளிக்கு வந்தால் கரோனா வரும் என்று பயப்படுகிறோம். ஆனால் இல்லம் தேடிச் சென்று பிள்ளைகள் படித்து வருகின்றனர். பயிற்சிக்கு செல்வதால் கரோனா தொடர்ந்து பரவி உயிரிழப்பு ஏற்பட்டால் அது பெரிய அளவில் அதிருப்தி அலையை பள் ளிக்கல்வித்துறைக்கு ஏற் படுத்தி, தமிழக முதல் வரை சிந்திக்க வைக்கும். இதையெல்லாம் தாங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும், முதன் மைச் செயலாளரிடமும், தொடக்கக்கல்வி இயக்கு னரிடமும் இணைந்து கலந்துபேசி நல்லதொரு முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews