Breaking

Tuesday, January 18, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு இணையவழி பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு இணையவழி பயிற்சி

தஞ்சை, ஜன.17: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தின்படி தொகுதி 2 வருவாய் உதவியாளர், உதவியாளர், எழுத்தர் மற்றும் தொகுதி 4-இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளின் வாயிலாக நிரப்பப்படும் காலிப் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு முறையே பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மறு சீரமைக்கப்பட்ட பாடத் திட்டம் குறித்த இலவச இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 20ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி நடத்தப்படவுள் ளது. இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் தொகுதி 2 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர் வுக்குத் தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ தகவல் அனுப்பி, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றுப் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog