போட்டி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை சமூக வலைதளங்களில் பரப்பிய நாமக்கல் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது
போட்டி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை சமூக வலைதளங்களில் பரப்பிய நாமக்கல் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, கடந்த இரு வாரத்துக்கு முன் ஆன்லைன் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் ஒரு வாரம் தொடர்ச்சியாக நடைபெற்றது. அப்போது, ஆங்கிலத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரணை நடத்தியது. அதில், நாமக்கல்லை சேர்ந்த பூர்ணிமா தேவி (27) என்பவர், தேர்வு முடிந்த பிறகு, தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை வெள்ளை தாளில் எழுதி, தேர்வு விதிமுறைகளை மீறி சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, பூர்ணிமாதேவி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில், பூர்ணிமா தேவி செயல்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. இதன் பேரில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து, பூர்ணிமா தேவியை கைது செய்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.