பணி நியமனம் மற்றும் 'டிரான்ஸ்பர்' ஆகியவற்றுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதை கேட்ட ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அசோக் கெலாட் அதிர்ச்சி அடைந்தார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட், கல்வி அமைச்சர் கோவிந்த் தோதாஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய முதல்வர், மாநிலத்தில் புதிய நியமனம் மற்றும் பணியிட மாற்றங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஆசிரியர்கள் தரப்பில், பணம் கொடுக்க வேண்டியது கட்டாயமாக இருப்பதாக பதில் அளிக்கப்பட்டது.
இதனை கேட்ட முதல்வர், அடுத்து என்ன கூறுவது என தெரியாமல் சில நிமிடங்கள் அதிர்ச்சி அடைந்தார். பின், 'ஆசிரியர்கள் கூறுவது துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.