ஆசிரியர், செவிலியர் பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படும் !
பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வரும் போது பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பார் என முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தெரவித்துள்ளார்.
மின்துறையில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 159 கட்டுமான உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் முதல்கட்டமாக 135 பேருக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பணியாணை வழங்கினர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
தேசிய ஜனநாயாக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். பொங்கலுக்குள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 256 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகள் 1,700 பேருக்கு முதல் தவணை தொகை பொங்கலுக்குள் வழங்கப்படும்.
புதுச்சேரிக்கு விரைவில் வரவுள்ள பிரதமர் மோடி, புதுச்சேரி வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லா நிலையிலும் புதுச்சேரி வளர்ச்சி பெறுகிறது. மத்திய அரசு நிதி உதவியுடன் எல்லா திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
காலி பணியிடங்களை வெகுவிரைவாக அரசு நிரப்பும். தேர்தல் அறிவிப்பு மார்ச்சுக்குள் வரும். அதற்கு முன்னதாக தேர்வு குழுவை அமைத்துள்ளோம். 10 முதல் 12 படித்தோர், டிகிரி முடித்தோர் என பிரித்துள்ளோம். பள்ளி படிப்பு முடித்தோருக்கு தேர்வு நடத்தவுள்ளோம். பணியிடங்களை தேர்வு மூலம் நடத்த உள்ளோம். தேர்தல் வந்துவிட்டால் கிடைக்குமா என்கின்றனர். தேர்வு குழு மூலம் தேர்வு நடத்தி தருவோம். அரசு பணி மக்களுக்கான சேவை பணியாகும் என்றார்.
Search This Blog
Friday, January 02, 2026
Comments:0
ஆசிரியர், செவிலியர் பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படும் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.