தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் - ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 07, 2021

Comments:0

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் - ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்,நவ.7:கரூர் மற் றும் குளித்தலை ஆகிய இரண்டு வட்டாரங்க ளில் ஊரக புத்தாக்க திட் டத்தில் தொழில்முனைவு மேம்பாட்டு அலுவலர் ஒப்பந்த அடிப்படையி லான பணிக்கு விண்ணப் பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

கரூர் மாவட்ட நிர்வா கம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது:

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் திட்டமா கும். இந்த திட்டம் கரூர் மாவட்டத்தில் கரூர் மற் றும் குளித்தலை ஆகிய 2 வட்டாரங்களில் செயல் பட்டு வருகிறது. இந்த வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர் கள் பயன்பெறும் வகை யில் ஒரு இட சேவை வசதி மையம் அமைக் கப்படவுள்ளது. இந்த மையத்தில் நிரப்பப்பட வுள்ள தொழில் முனைவு மேம் பாட்டு அலு வ லர் மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய இரண்டு ஒப்பந்த பணியிடங்களுக்கு ஏதே னும் முதுகலை பட்டம் முடித்த மற்றும் கணினி திறன் பெற்றுள்ள 40 வயதுக்குட்பட்ட ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவ டிக்கை சார்ந்த திறன் பெற்றுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த பணியிடங்க ளுக்கான விண்ணப்பங் களை https://www.tnhrtp.org என்ற இணையதள முகவரியில் இருந்து பதி விறக்கம் செய்து விண் ணப்பிக்க விரும்புவோர் நவம்பர் 15ம்தேதி மாலை 5மணிக்குள் பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பத் தினை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமா கவோ திருச்சி மாவட்ட கலெக்டரின் அலுவலகத் தில் அல்லது மாவட்ட செயல் அலுவலர், தமிழ் நாடு ஊரக புத்தாக்க திட்டம், முதல் தளம், பூமாலை வணிக வளா கம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி-620001 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற் கான விண் ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
.com/img/a/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84454209