வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தால், வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதில், 12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பங்கள், செப்.,8 முதல் பெறப்பட்டன. மொத்தம், 45 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 2ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடுவதாக பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.நிர்வாக காரணங்களுக்காக, தரவரிசைப்பட்டியல் வெளியிடுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, பின்னர் பல்கலை சார்பில் அறிவிக்கப்பட்டது.
வன்னியருக்கான, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த, 1ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாகவே, தரவரிசைப்பட்டியல் வெளியிடுவது தாமதமாவதாக தெரியவந்துள்ளது.
துணைவேந்தர் குமார் கூறுகையில்,''தரவரிசைப்பட்டியலை வெளியிட நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். வன்னியர் இடஒதுக்கீடு பிரச்னையால் தரவரிசைப்பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எங்களது பல்கலை மட்டுமல்ல, பல்வேறு பல்கலைகளும் தரவரிசைப்பட்டியல் வெளியிடுவதை நிறுத்தியுள்ளன. அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறோம். விரைவில் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.