தேசிய அடைவு தேர்வை கைவிட ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 11, 2021

Comments:0

தேசிய அடைவு தேர்வை கைவிட ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆன நிலையில் 3, 5, 8 ம் வகுப்பு மாணவர் களுக்கு தேசிய அடை வுத்தேர்வு நடத்துவதை கைவிட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் வலியுறுத்தி உள்ளார்.

அவர் கூறியதாவது: கொரோனாவால் மாதங்களுக்கு பின் 19 ஆரம்ப, நடுநிலை பள்ளி கள் திறந்து சுழற்சி முறை யில் வகுப்புகள் நடக் கின்றன. மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடு செய்தல், இடைவெளியை வகையில் ஆசி போக்கும் ரியர்கள் பணியாற்றி வரு கின்றனர்.
நீண்டகாலம் பள்ளிக்கு வருகை தராத நிலை யில் இருந்த ஆரம்ப வகுப்பு மாணவர்களை கற்றல் சூழலுக்கு கொண்டு வருவது கடினமான பணி.

இச்சூழலில் பள்ளிகள் திறந்து ஒருவாரம் ஆன நிலையில் 3, 5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இம் மாதத்தில் தேசிய அடைவு தேர்வு (என்.ஏ.எஸ்.) நடத்தப்படும் என பள்ளி கல்வி அறிவித்தது பொருத் தமற்றது. 2019-2020ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்ந்த மாண வருக்கு அந்த வகுப்பில் முழுமையாக படிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை. 2020-2021ல் பள்ளிக்கே வாய்ப்பு இல்லை. செல்ல இக் கல்வியாண்டிலும் மாதங்கள் பள்ளிக்கு 5 வர இயலாமல் தற்போது நேரடியாக 3 ம் வகுப் பிற்கு வந்துள்ளனர். இதே நிலைதான் 5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும். இந்த அடைவு தேர்வு உளவியல் அணுகுமுறைக்கு மாறா னது.

இத்தேர்வு தேர்ந்தெ டுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும் என அறிவித்தாலும் அவர் களும் கொரோனாவால் கற்றல் வாய்ப்பை இழந் தவர்கள் என கவனத்தில் கொள்ள வேண்டும். மாண வர் நலன் கருதி அடைவுத் தேர்வை கைவிட வேண் டும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews