கல்வியறிவு தேர்வில் 89 மதிப்பெண் 104 வயது கேரள மூதாட்டி சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 17, 2021

Comments:0

கல்வியறிவு தேர்வில் 89 மதிப்பெண் 104 வயது கேரள மூதாட்டி சாதனை

கேரளாவில் நடந்த கல்வியறிவு தேர்வில் 100-க்கு 89 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த 104 வயது கேரள மூதாட்டியின் மன உறுதிக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா விளங்குகிறது. இம்மாநிலத்தின் மொத்த கல்வியறிவு 96.2 சதவீதமாக உள்ளது. இதில் 92.07 பெண்கள், 96.11 சதவீத ஆண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 104 வயது மூதாட்டி குட்டியம்மா. இவர் சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை என்பதால் எழுத, படிக்க தெரியாது. இவர் சமீபத்தில் அரசு நடத்தும் சாஷாரத்தா வகுப்பில் சேர்ந்து மலையாளம் மொழியில் எழுத, வாசிக்க கற்றுக் கொண்டார்.
இவர் அண்மையில் அரசு நடத்திய கல்வியறிவுத் தேர்வில் நூற்றுக்கு 89 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். கல்வி கற்பதில் இருந்த இவரது மனஉறுதியை பாராட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குட்டியம்மாவின் தணியாத கல்வி தாகத்துக்கு தலைவணங்குவதாகவும் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews