தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு காரணமாக அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 10 நாட்களுக்கு மேலாக நச்சு புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. காற்றின் தர குறியீடு எனப்படும் air quality index பல நாட்களாக மிகவும் மோசமான மற்றும் கடுமையான வரம்பில் உள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு இந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் காற்று மாசுபாடு நெருக்கடியை சமாளிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை செயல்பட தடை விதித்துள்ளது. நவம்பர் 21ம் தேதி வரை அரசு அலுவலக பணியாளர்கள் 50 பேர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களிலும் இந்த நடைமுறை பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி அரை அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் டிரக்குகளை தவிர தேவையற்ற டிரக், லாரிகள் டெல்லி பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல விமானம், ரயில், பேருந்து மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தவிர்த்து அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Wednesday, November 17, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.