580 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட சந்திர கிரகணம்; இன்று தோன்றுகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 19, 2021

Comments:0

580 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட சந்திர கிரகணம்; இன்று தோன்றுகிறது

கடந்த 580 ஆண்டுகளில் தோன்றக்கூடிய உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (நவ.,19) வானில் தோன்றுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருசில பகுதிகளில் மட்டும் இதை காணலாம் எனக் கூறப்படுகிறது.

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. பொதுவாக ஆண்டுக்கு சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணமும், நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணமும் உருவாகின்றன. அந்த வகையில், இன்று உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் தோன்றுகிறது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பிறகு 6 மணிநேரத்திற்கு மேலாக தோன்றும் இந்த நீண்ட சந்திர கிரகணம், அடுத்ததாக 2669ம் ஆண்டில் தான் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11:32 மணி முதல் மாலை 05:34 மணிவரை தோன்றும் இந்த சந்திர கிரகணம், வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணத்தை மக்கள் பார்க்கலாம். இந்தியாவை பொறுத்தவரையில் அருணாச்சல் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சிறிது நேரம் மட்டும் காண முடியும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தெரியாது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews