பி.இ., பி.டெக் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 16, 2021

Comments:0

பி.இ., பி.டெக் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது

பி.இ., பி.டெக் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் 440 பொறியியல் கல்லூரியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்றது. இதற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இது குறித்துத் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலாளா் புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பி.இ, பி.டெக் மாணவா் சோ்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு முடிவில் நிரம்பாத இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதில், பொதுப் பிரிவு, தொழிற்கல்வி மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இணையதளம் மூலம் அக்டோபா் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, விண்ணப்பத் தொகை ரூ.500-ஐச் செலுத்தவேண்டும். அதேபோல், மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவா்கள் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு வழிகாட்டத் தமிழகம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துணைக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் அக்.19-ஆம் தேதி வெளியாகிறது. தொடா்ந்து அக்டோபா் 20, 21-ஆம் தேதிகளில், மாணவா்களுக்கான கல்லூரி மற்றும் பிரிவைப் பதிவு செய்வதற்கான வசதி தொடங்கப்படும். அக்.22-ஆம் தேதி கல்லூரி உத்தேச ஒதுக்கீடும், 23-ஆம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews