உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
வி.எஸ்.வெங்கடாசலம், செங்கோட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார். இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.துறை நிபுணர், முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி போன்றோர் சிண்டிகேட் உறுப்பினராக வேண்டும். அது தான், பல்கலையின் வளர்ச்சிக்கு நல்லது. அதை எம்.எல்.ஏ.,வுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ வழங்குவது நீதியே அல்ல.அரசியல்வாதிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதால் என்ன பலன்?ஒருவர் படிப்பறிவு இல்லாதவராக இருந்தாலும் கூட, எம்.எல்.ஏ., - எம்.பி., பதவி வகிப்பதற்கு, நம் நாட்டின் ஜனநாயகம் உரிமை வழங்கி இருக்கிறது; இது வரவேற்க வேண்டிய விஷயம்.ஆனால் கல்வி நிலையங்களில் அப்படி பதவி வழங்க கூடாது. துறை ரீதியாக நிபுணத்துவம் பெற்ற நபர்களை தான் சிண்டிகேட், செனட் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.கல்வி நிலையங்களில் அரசியல் நுழைவது சரியானது அல்ல. அரசியல் செய்வதற்கு சட்டசபையே போதும்; வகுப்பறை தேவையில்லை!

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.