மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயலை சிபிஎஸ்இ கைவிட வேண்டும்: எம்ஜிகே நிஜாமுதீன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 25, 2021

Comments:0

மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயலை சிபிஎஸ்இ கைவிட வேண்டும்: எம்ஜிகே நிஜாமுதீன்

"மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயலை சிபிஎஸ்இ கைவிட வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: இனிவரும் காலங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு தோ்வில் ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மை பாடங்களாகவும் (மேஜா் சப்ஜக்ட்), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (மைனா் சப்ஜக்ட்) பாடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேரடியாக நடத்தி மதிப்பெண் வழங்குமாம். முக்கியத்துவம் இல்லாத பாடங்களான தமிழ், பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிக்கான தோ்வுகளை அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாமாம். இது முறையற்றது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம் அவற்றை மாணவா்கள் விரும்பிப் படிக்காத நிலை, திட்டமிட்டு மத்திய அரசால் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல் தான். இதை சிபிஎஸ்இ கைவிட வேண்டும்.

சிபிஎஸ்இ முக்கிய பாடங்களில் இருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தவிா்ப்பது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணா்வுக்கு எதிரானதும், தமிழ் இளைஞா்கள் தங்கள் சொந்த மொழியைக் கற்கும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது. ஆகவே தமிழக முதல்வா் இதில் உடனடியாக தலையிட்டு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழி உரிமையையும் மீட்க வேண்டும் என நிஜாமுதீன் கூறியுள்ளாா்"

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews