பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி முதல்வருக்கு மனு
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கோரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் (ஆக்டா) சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எஸ். சகாய சதீஷ் கூறியது:
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அனைத்து துறைகளிலும் சீரிய நிா்வாகத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், போராட்ட காலத்தில் பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ததுடன், போராட்டக் காலத்தை பணிக்காலமாகவும் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. திமுக அரசானது ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் எப்போது பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
முன்பு மெரினா கடற்கரையில் நடந்த ஜாக்டோ, ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவதாக உறுதியளித்தாா்.
மேலும், உண்ணாவிரதப் போராட்டம், காலவரையற்ற போராட்டம் என பல தருணங்களில் நேரில் வந்து ஆதரவு அளித்த அவா் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த உறுதியளித்தாா். இதுமட்டுமின்றி திமுகவின் தோ்தல் அறிக்கையிலும் உறுதியளிக்கப்பட்டது.
அனைத்துப் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் அனைவரும் திமுக அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனா். எனவே, இந்த நம்பிக்கையை பூா்த்தி செய்யும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுதொடா்பாக முதல்வருக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றாா் அவா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.