சிறப்பு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 31, 2021

Comments:0

சிறப்பு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிறப்பு பள்ளிகள் மற்றும் வழக்கமான பள்ளிகளில், மாணவர் மற்றும் சிறப்பு ஆசிரியர் விகிதம் தொடர்பான தெளிவான நடைமுறைகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடல் மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த, நீதிபதி ஏ.என். கன்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதம் பேர் சிறப்பு குழந்தைகளாக உள்ளனர். இவர்கள் சுயமாக செயல்படுவதற்கு போதிய பயிற்சி அளிக்க சிறப்பு ஆசிரியர்கள் தேவை. உடல் ஊனமுற்றோர் கமிஷனில் 1.20 லட்சம் பேர் சிறப்பு ஆசிரியர்களாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள சிறப்பு பள்ளிகள் மற்றும் வழக்கமான பள்ளிகளில் பணியாற்ற, மாணவர் மற்றும் சிறப்பு ஆசிரியர் விகிதம் தொடர்பாக ஒரு தெளிவான நடைமுறையை உருவாக்க வேண்டும்.அது உருவாக்கப்படும் வரை டில்லி மாநில உடல் ஊனமுற்றோருக்கான கமிஷன், 2019ல் அளித்த பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.

அந்த பரிந்துரையின்படி, 8 மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.இவ்வாறு சிறப்பு பள்ளிகள் மற்றும் வழக்கமான பள்ளிகளில் பணியாற்ற எவ்வளவு சிறப்பு ஆசிரியர்கள் தேவை என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அந்தப் பணியில் சேர்க்கப்பட வேண்டும்.

வரும், 2022 - 2023 கல்வியாண்டுக்கு முன்பாக இந்தப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாநில உடல் ஊனமுற்றோருக்கான கமிஷன்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews