திருப்பரங்குன்றம், அக்.11: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை காமராஜர் பல் கலைக்கழகத்தில் கடந்த2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு பட்டம ளிப்பு விழா நடைபெற வில்லை. தற்போது கல் லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உயர்கல்வி, அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல் வேறு தேவைகளுக்கு பட்ட சான்றிதழ்களையும் இதில்குறிப்பாக ஆய்வு மாண வர்கள் முனைவர் பட்ட சான்றிதழ்களை எதிர் பார்த்து காத்திருக்கின்ற னர்.
வழக்கமாக பட்டம ளிப்பு விழாவிற்கான அறிவிப்பை செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டி ருக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜர் பல்க லைக்கழக நிர்வாகம் தற் போது வரை பட்டமளிப்பு விழா குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. சுமார் 600 ஆய்வு மாணவர்கள் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக் கும் நிலை உருவாகியுள் ளது. இதனால் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளு டன் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Search This Blog
Monday, October 11, 2021
Comments:0
காமராஜர் பல்கலையில் பட்டமளிப்பு விழா - மாணவர்கள் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.