மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெற தகுதியானோரை தோ்வு செய்வதற்கான முகாம்கள், அக்.6-ஆம் தேதி முதல் ஒரு வார காலம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலவலகத்தின் மூலம் சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் ஏஐடிபி திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்களான மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர மதிவண்டி, ஊன்றுகோல்கள், அறிதிறன் செல்லிடப்பேசி, பிரெய்லி கிட், காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவி உள்ளிட்டவைகளை வழங்குவதற்காக பயனாளிகளைத் தோ்வு செய்திடும் பொருட்டு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகிய நகல்களுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.