''குடும்பத் தலைவியருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பார்'' என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு கூறினார்.
திருச்சி மாநகர சாலைகளை நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தென்னுாரில் நேற்று துவக்கி வைத்தார். பின் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது. இதைவிட நேர்மையாக தேர்தல் நடத்த முடியாது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்தன. குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும். குறிப்பாக குடும்பத் தலைவியருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் முறைப்படி அறிவிப்பார்.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் திருச்சி கம்பரசம்பேட்டை நொச்சியம் இடையே இரு தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரகப் பகுதிகளை விட நகர்ப்புற பகுதிகளே அதிகம். எனவே ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்ப்புற பகுதிகளையும் ஜல்ஜீவன் திட்டத்தில் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.