சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு முதல் பருவ தேர்வுக்கான தேதி நாளை மறுநாள்(அக்.,18) வெளியிடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
அதன்படி மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் நடைமுறைகள் மற்றும் தேர்வுகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொது தேர்வுக்கு பதில் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் படி இந்த பருவ தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பிளஸ் 2வுக்கு 114 பாடங்களுக்கும் 10ம் வகுப்பில் 75 பாடங்களுக்கும் பருவ தேர்வு முறை அமலாகிறது. முக்கிய பாடங்கள் மற்றும் விருப்ப பாடங்கள் என இரண்டு பிரிவு பாடங்களுக்கு தேர்வு அட்டவணைகள் தனித்தனியாக வெளியிடப்பட உள்ளன.முதல் பருவ தேர்வுக்கான அட்டவணையை நாளை மறுநாள் சி.பி.எஸ்.இ., வெளியிட உள்ளது.
நவம்பர் டிசம்பரில் தேர்வு நடத்தப்பட உள்ளது. மொத்தம் ஒன்றரை மணி நேரத்துக்கு 'அப்ஜெக்டிவ்' என்ற கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படுகிறது.பின் அடுத்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் இரண்டாம் பருவத்தேர்வு நடத்தப்படும். அதன்பின் இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.