1 முதல் 8வது வரை வகுப்புகள் தொடக்கம் பள்ளிகளை ஆய்வு செய்து தயார்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 16, 2021

Comments:0

1 முதல் 8வது வரை வகுப்புகள் தொடக்கம் பள்ளிகளை ஆய்வு செய்து தயார்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தரவு

1 முதல் 8வது வரை வகுப்புகள் தொடக்கம் பள்ளிகளை ஆய்வு செய்து தயார்படுத்த வேண்டும்

அதிகாரிகளுக்கு உத்தரவு

சேலம், அக்.16: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும். கல்லூரி மாணவர்களுக் கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக. வரும் 1ம் தேதி முதல். 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது. இதனையடுத்து அதற்கான முன்னேற் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாட்டு பணிகள் இதனிடையே, பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து கொரோனா நோய்தடுப்பு வழிகாட்டு நெறி முறை நடவடிக்கைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளையும் நேரடியாக ஆய்வு செய்து தயார்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது துவக்க, நடுநிலைப்பள்ளிக ளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிவ றைகள் தூய்மையான முறையில் பராமரிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மேலும், முழு சுகாதார சூழ்நிலையை பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதுஒருபுறம் இருக்க, நீண்ட இடைவெளிக்கு பின் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்பதால். அவர் களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி, எளிதில் அணு குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து படிக்கும் வகையில், வகுப்பறைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாணவர் எண்ணிக்கை அதிகரித்து, வகுப் பறை பற்றாக்குறை இருந்தால். சுழற்சி அடிப்படையில் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதவிர மழைநீர் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் தேங்காத வகையிலும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், பழுதடைந்த கட்டிடங்கள், மழையால் சேதம டைந்த கட்டிடங்கள் இருந்தால், மாணவர்கள் அருகில் செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடை முறைகள் குறித்து, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும், வரும் 27ம் தேதிக்குள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். | அப்போது பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகுந்த அறிவு ரைகளை வழங்க வேண்டும். இதேபோல், மாவட்ட கல்வி அலுவலர்கள் 10 சதவீத பள்ளிகளையும். சிஇஓக்கள் 2 சதவீத பள்ளிகளையும் மாதிரி ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews