பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலனை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 19, 2021

Comments:0

பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலனை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்


ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளில் 50 சதவீத கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் தெரிவித்தார்.


தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களுடனான கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற் றது. இந்தநிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரி யர் சங்கங்களுக்கான கலந்துரையாடல்நிகழ்ச்சிசென்னை டி.பிஐ வளாகத்தில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ் நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியவை உள்பட 180-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கரோனா பரவலை கருத்தில் கொண்டு பணி நிரவல் கூடாது, அரசுப் பள்ளி களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் ஆகியவை உள்பட ஆசிரியர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழிசெய்தியாளர்களிடம் கூறியது: 'இயற்பியல் படித்த ஆசிரியர்கள் உயி ரியல் உள்ளிட்ட வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை உள்ளது என நடை முறைப் பிரச்னைகள் குறித்து ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆசிரி யர்கள் மட்டுமல்லாது கல்விப் பணியாளர்கள் தங்களது பிரச்னைகளைக் கூறினர். ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய முடிவு உடன டியாக எடுக்கப்படும். ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் அறிக் கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்ப டும். பணி உயர்வு தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் பரி சீலிக்கப்படும். ஆண்டுக்கு மூன்று முறை குறைதீர் கூட்டம் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் நடத்தப்பட வேண்டும், ஆனால் இதுவரை அது நடத்தப்படாமல் உள்ளது. கல்வித்துறை சார்ந்த சிறிய அள விலான பிரச்னைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சரிப்படுத்த வேண் டும். நிதி செலவு ஏற்படும் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.


இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கைகளில் 50 சதவீத கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றப்ப டும். மேலும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews