ஆசிரியர்களின் பெய ரில் போலியாக முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் குறிப்பிட்ட ஆசிரி யரின் பெயர், புகைப்ப டம், பணிபுரியும் பள்ளி போன்ற விவரங்களை பதிவு செய்து, ஆசிரியரின் ஒரிஜினல் முகநூல் பக் கத்தில் யார், யாருடன் நட்பாக இருக்கிறார் என் பதை அறிந்து அவர்க ளுக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புகின் றனர். எப்படி இருக்கீங்க, எங்க இருக்கீங்க என தொடங்கும் உரையாடல் கள், எனக்கு உதவி செய்ய முடியுமா, உங்களுக்கு அப்புறம் தந்துவிடுகிறேன், மாலையில் அனுப்பி விடு கிறேன் என ஆசை வார்த்தை கூறுகின்றனர். அத்துடன், உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என கேட்கின்றனர்.
இதனால் எதிர்முனை யில் உள்ளவர்கள், ஆசிரி யர்தான் பணம் கேட்கிறார்கள் என மோசடி ஆசாமிகள் வழங்கும் ‘கூகுள் பே' மற்றும் 'போன்பே' நம்பர்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர்.
அதன்பின்னர்தான் மோசடி பேர் வழிகளுக்கு பணம் அனுப்பிவிட்டுஏமாந்துள்ளோம் என வருந்துகின்றனர். இதுகு றித்து பாதிக்கப்பட்டவர் கள் எந்தவித புகாரும் போலீசில் தெரிவிப்பது இல்லை. இதனால் நபர் களின் பேஸ்புக் பண மோசடி தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னால் மட்டுமே மோசடி பண பறிப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.