ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண் ஆசிரியர்களுக்கு பணியாற்றும் ஒன்றியத்தில் பணி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 24, 2021

Comments:0

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண் ஆசிரியர்களுக்கு பணியாற்றும் ஒன்றியத்தில் பணி?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண் ஆசிரியர்களுக்கு பணியாற்றும் ஒன்றியத்தில் பணி வழங்க வேண்டும் - கலெக்டரிடம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் மனு
IMG_20210924_122130
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண் ஆசிரியர்களுக்கு பணியாற்றும் ஒன்றி யத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரி யர்கள் கூட்டணியினர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட் டணியினர், வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனை சந்தித்து நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘நடை பெற உள்ள ஊரக உள் ளாட்சி தேர்தலில்தேர்தல் அலுவலராக பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர் களுக்கு பணிபுரியும் ஒன்றி யத்திலும், அருகில் உள்ள ஒன்றியங்களில் தேர்தல் அலுவலராக பணி நியம னம்செய்து ஆணை வழங் கிட வேண்டும். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மகப்பேறு விடுப்பில் உள் ளோர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைசெய்து கொண்டவர்கள், இருதய நோயாளிகள் உள்ளிட்ட நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோருக்கும் தகுந்த மருத்துவ காரணங்களை கொண்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84639475