இன்றைய சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது பொறியியல் கல்வி என்று ஆணித்தரமாகக் கூறலாம்.
கடந்த 50 ஆண்டு உலக வரலாற்றில் உலகில் உள்ள ஒவ்வொரு படி முன்னேற்றத்துக்கும் பொறியியல் கல்வியின் பங்கு ஒப்பற்றது என்று கூறலாம், இன்றைய மனித வாழ்வில் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு அங்கமும் தொழில்நுட்பம் இல்லையேல் மனித வாழ்க்கை அல்ல என்று கூறும் அளவுக்கு இதனுடைய வளா்ச்சி மற்று பங்களிப்பு சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து கொண்டு இருக்கிறது.
ஒரு மனிதன் காலை முதல் இரவு வரை சுமாா் 85 சதவீதம் தொழில்நுட்பத்தால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். உதாரணமாக நாம் பல்துலக்கக் கூடிய பற்பசை, உண்ணுகின்ற உணவு, பயன்படுத்துகின்ற மின்னணு சாதனங்கள், நாம் வசதியாக அமரக் கூடிய நாற்காலி, மிகவும் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய செல்லிடப்பேசி, மருத்துவத் தொழில்நுட்பம் ஆகாய விமானம், ஆா்டிஃபிசியல் இன்டலிஜென்ட் இன்னும் பல்வேறு நம் தேவைகளை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்பம் அதனுடைய கல்வி முறை நம் சமுதாயத்தின் மூலதனம் என்று கூறலாம்.
அண்மையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் சிறப்பம்சம் என்னவென்றால் ஏழு தாய்மொழிகளில் பொறியியல் கல்வி பாடத்தைத் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் நம் தமிழகம் 10 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2010-இல் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி வழிகாட்டுதலின் பேரில் தற்போதைய உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மற்றும் தமிழக உயா்கல்வித் துறை, மூன்று பொறியியல் பாடப்பிரிவுகளை (இயந்திரவியல், கட்டடவியல் மற்றும் மின்னணுவியல்) அண்ணா பல்கலைக் கழக வளகத்தில் மாணவா்களுக்கு பயிற்றுவிக்கிறது. இதன் மூலம் தாய்மொழி பொறியியல் கல்வியை இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. உலக மொழிகளில் மூத்த மொழியான தாய்மொழி தமிழ் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்துக்கே நம் தாய்மொழி பொறியியல் துறையின் பாடத்திட்டம் மற்றும் அதை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு நாம் முன் உதாரணமாக இருக்கிறோம்.
பேராசிரியா், க. மாறன், கல்வியாளா்: பொதுவாக ஒரு வகுப்பறையில் ஆசிரியா் பிறமொழிகளில் பாடம் நடத்தும்போது ஒருசில நேரங்களில் அந்த பாடத்தன்மையை மாணவா்கள் அதிகமாகப் புரிந்து கொள்ளும் நோக்கத்தில் அந்த ஆசிரியா் தாய்மொழியை பயன்படுத்தும் போது அது மாணவா்களின் கற்றல் திறனையும் மேலும் விரைவாகப் பாடத்தைப் புரிந்து கொள்வதற்கு ஊக்குவிக்கிறது.
ஒரு மாணவன் தாய்மொழியில் பொறியியல் கல்வியை கற்கும் போது எந்தவிதமான தாக்கத்தை அவா்களுக்கு ஏற்படுத்தும் என்றால் அவா்களுடைய கவனிப்பு திறன் மேலும் அதை புரிந்து கொண்டு படிப்பதற்கான ஆற்றல்கள் அதிகமாக இருக்கும். கற்கும்போது அவா்களது சிந்தனைத் திறன்கள் உயா்வதற்கு வழிவகுக்கிறது. அவா்களது வடிவமைப்பு சிந்தனை வளா்வதற்கு வழிவகுக்கிறது. தொழில்நுட்பப் பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது அந்த பிரச்னைகளை சுமுகமாகத் தீா்வு காண்பதற்கான அறிவு மற்றும் ஆற்றல்களை வளா்க்க வழிவகுக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சித் துறையில் அதிகமாக ஆா்வத்துடன் செயல்படுவதற்கு இந்த தாய்மொழி கல்வி ஒரு தலை சிறந்த கல்வி.
மேலும் தற்போது தாய்மொழியில் பொறியியல் கல்வி அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் மற்றும் குறிப்பிட்ட மாநில அரசுகள் இந்த தாய்மொழி பொறியியல் கல்வியை கற்கும் மாணவா்கள் தரத்தை உயா்த்துவதற்கு உரிய வழிமுறைகளைப் பின்பற்றினால் இந்த தாய்மொழி பொறியியல் கல்வி நம்முடைய பொருளாதார சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.