ஆசிரியர் தினம் இன்று(செப்.,5) கொண்டாடப்படுகிறது. மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, அரசியல் பிரமுகர்களை அழைத்து விழா நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5 ஆண்டுதோறும், தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
மாநில அரசின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், விருது பெறுகின்றனர்.
மாநில அளவிலான விருதுக்கு, 389 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில், சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 15 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே விருது வழங்கி விட்டார். மற்ற மாவட்டங்களில் தேர்வானவர்களுக்கு, இன்று முதல் விருது வழங்கும் விழாவை நடத்தி கொள்ளலாம்.
இந்த விழாக்களில், மாவட்ட அளவில் மாநில அமைச்சர்கள், ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களை விருந்தினராக அழைத்து கொள்ளலாம் என, பள்ளி கல்விஅதிகாரிகளுக்கு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், ஆசிரியர் தினத்தில் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யவில்லை.
Search This Blog
Sunday, September 05, 2021
Comments:0
ஆசிரியர் தின விருது நிகழ்ச்சி; அரசியல் பிரமுகர்களுக்கு அனுமதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.