தேசிய வருவாய் திறனாய்வு தேர்வு கல்வி உதவித்தொகைக்கு மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் அனுப்ப வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 04, 2021

Comments:0

தேசிய வருவாய் திறனாய்வு தேர்வு கல்வி உதவித்தொகைக்கு மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் அனுப்ப வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

பள்ளிக் கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலு வலர்களுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2020-2021ம் ஆண்டில் தேசிய வருவாய் வழிமற்றும் திறன் தேர்விற் கான (என்எம்எம்எஸ்எஸ்) கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவ, மாணவிகளின் சரியான வங்கிக்கணக்கு விவரங்களை பதிவேற்றிட அறிவுறுத்துமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

எனவே தங்கள் மாவட் டத்தில் கடந்த 2020-2021ம் ஆண்டில் தேசிய வருவாய் வழிதிறன் தேர்விற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் 413 மாணவ, மாணவிக ளின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை செலுத்த முடியாதவாறு உள்ளது. வங்கி கணக்குகள் சரி யானவையாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. அந்த கணக்குகளை சரிபார்த்து வரும் 8ம் தேதிக்குள் பதிவேற்றிட அந்தந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அந்தந்த மாணவ, மாண விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணி முடிக்கப் பட்ட தகவல்களை வரும் 8ம் தேதி மாலை 5 மணிக் குள் இணை இயக்குனர் (நாட்டு நலப்பணித் திட் டம்) மின்னஞ்சல் முகவ ரிக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும். இதில் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்பட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை இணையதளத்தில் பதி வேற்றம் செய்து, கல்வி உதவித்தொகைக்கு தகு தியுடைய அனைத்து மாணவ, மாணவிகளும் பயனடைய தக்க நடவ டிக்கைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews