சென்னை:சென்னை தரமணியில் உள்ள, அரசு தோல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், டிப்ளமா படிப்புக்கான சேர்க்கை நடந்து வருவதாகவும், மாணவர்கள் நேரடியாக கல்லுாரியை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை தரமணி, சி.ஐ.டி., வளாகத்தில் உள்ள, அரசு தோல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதில், மூன்றரை ஆண்டு டிப்ளமா படிப்பு நடத்தப்படுகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ், லேப்டாப்' மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரியில் படித்த பலர், தொழில் அதிபர்களாக மாறியுள்ளனர். பலர் அதிக ஊதியத்துடன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். இந்த கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு, வளாக நேர்காணல் நடத்தப்பட்டு, தோல் பொருட்கள் தயாரிப்பு ஆலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேதியியல் தொழிற்சாலையிலும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், அண்ணா பல்கலையில், பி.டெக்., - எம்.டெக்., படிப்புகளையும் மேற்கொள்ளலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள், கல்லுாரி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.