அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கனரா வங்கியில் பூஜ்ஜியம் இருப்பு கணக்கு – புதிய உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 10, 2021

Comments:0

அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கனரா வங்கியில் பூஜ்ஜியம் இருப்பு கணக்கு – புதிய உத்தரவு!

அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கனரா வங்கியில் புதிதாக பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்குத் துவக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வங்கி கணக்கு:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு புத்தகப்பை, பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள் மற்றும் உதவித்தொகை என பல வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு வழங்கப்படும் உதவித்தொகையை பெறுவதற்காக மாணவர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டு வருகிறது. எஸ்.பி.ஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும் என்று வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அதனை அறியாத பெற்றோர்கள் மாணவர்களின் வங்கி கணக்கில் அரசு தரப்பில் வழங்கப்படும். மொத்த தொகையையும் எடுத்து விடுகின்றனர். வங்கியில் குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 1000 இல்லாத காரணத்தால் 500 ரூபாய் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அரசு வழங்கும் உதவித்தொகை மாணவர்களுக்கு சென்றடைவதில்லை.
அரசு மாணவர்களின் கல்விக்காக வழங்கும் உதவித்தொகையானது அபராதமாக செல்வதனை தடுக்க தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கும் புதிதாக கனரா வங்கியில் பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும் என்று “சமக்ரா சிக்ஷா அபியான்” திட்ட இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார். பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்கு என்பதனால் மாணவர்களின் வங்கி கணக்கில் இருப்பு தொகை இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எனவே அரசு அளிக்கும் உதவித்தொகை மாணவர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews