ஊர்க்காவல் படையில் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம் - அக்டோபர் 24ஆம் தேதி கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 25, 2021

Comments:0

ஊர்க்காவல் படையில் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம் - அக்டோபர் 24ஆம் தேதி கடைசி நாள்

ஊர்க்காவல் படையில் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம்


கோவை, செப். 24: ஊர்க்காவல் படையில் சேவை செய்ய தகுதியுள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:


கோவை மாவட்ட காவல் துறைக்கு உதவியாக தன்னார்வமாக கோயில் மற்றும் இதரப் பாதுகாப்பு பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் ஊர்க்காவல் படையில் சேவை செய்ய தகுதியுள்ளோர்க ளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதுக் குள்ளான ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகங்களில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோ பர் 13ஆம் தேதி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும், நன்னடத்தை மற்றும் உடல்தகுதி உடை யவராக இருக்க வேண்டும். மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டும் விண்ணப்பிக்க லாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள பெட்டியிலோ அக்டோபர் 24ஆம் தேதி மாலை 5 மணிக் குள் சேர்க்க வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல்தகுதித் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் தகுதியுள்ளோர் தேர்வு செய்யப்படுவர். அரசுப் பணியாளர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
IMG_20210925_181926%257E2

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84634188