அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 06, 2021

Comments:0

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பள்ளிக் கல்வி - திருவண்ணாமலை மாவட்டம் - அனைத்து வகை அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் -01.09.2021 முதல் 910.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுதல் - ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை COVID-19 SWAB TEST கண்டிப்பாக மேற்கொள்ளுதல் - தொடர்பாக

உத்தாவு:
பார்வையில் காணும் அரசாணை மற்றும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைந்து வகைப் பள்ளிகளில் 9,10:11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப்பணியாளார்கள் அனைவரும் 15 தினங்களுக்கு ஒரு முறைஅருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் COVID -19 SWAB TEST மேற்கொள்வதை முறையாக உரிய நடவடிக்கை மூலம் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களையும் சுழற்சி முறையில் COVID -19 SWAB TEST மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவும் அனைத்துப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் பணியினை அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் தவறாமல் கண்காணித்து ஒவ்வொரு 15 தினங்களுக்கும் தவறாமல் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இப்பணிக்கு என ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளை கண்காணிந்து இப்பொருள் சார்ந்து அறிக்கையினை அளிக்குமாறு நெரியிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
IMG_20210906_184623
IMG_20210906_184600

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84620775