1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 23, 2021

Comments:0

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை: அன்பில் மகேஷ்


1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.


கரோனா பரவலால் கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கரோனா குறைந்ததையடுத்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.


இந்நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை சமர்பித்தது. இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கூறியது,


“பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 1ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர்.


ஆனால், பெற்றோர்கள் மத்தியில் கரோனா அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை. கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.”
IMG_20210923_134339
IMG_20210923_134357

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84633366