JEE மெயின் 2021, 4ம் கட்ட தேர்வு விண்ணப்ப பதிவு – ஆகஸ்ட் 11 வரை அனுமதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 10, 2021

Comments:0

JEE மெயின் 2021, 4ம் கட்ட தேர்வு விண்ணப்ப பதிவு – ஆகஸ்ட் 11 வரை அனுமதி!

தேசிய தேர்வுகள் முகமை ஜேஇஇ மெயின் 4ம் கட்ட தேர்வின் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை இன்று முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ஜேஇஇ தேர்வு:
மத்திய அரசின் உயர்நிலை பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய அரசால் நடத்தப்படுவது தான் ஜேஇஇ தேர்வாகும். ஆண்டு தோறும் இதன் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கமாக ஆண்டிற்கு இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வானது நடப்பு ஆண்டில் இருந்து நான்கு முறை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் 2 கட்ட தேர்வுகள் முன்னதாக நடந்து முடிந்து விட்ட நிலையில், 3 மற்றும் 4ம் கட்ட தேர்வுகள் கொரோனா தொற்று அதிக பரவல் அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. JEE மெயின்ஸ் 3ம் கட்ட தேர்வுகள் ஜூலை 20 முதல் 25 வரை நடந்து, அதன் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 17 தேர்வர்கள் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். JEE மெயின் 4ம் கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 26, 7, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. 4ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 9ம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 11ம் தேதி இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முன்னதாக விண்ணப்பித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இருப்பினும் அவர்கள், தங்கள் Category, Subject போன்ற மற்ற விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். மாணவர்கள் www.jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். JEE மெயின் 2021 விண்ணப்ப செயல்முறை:

முதலில் jeemain.nta.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
‘JEE Main 2021 August Fourth Session’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது, தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும்.

பின்னர், தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் தவறுகள் இருந்தால் திருத்தலாம்.
படிவத்தை சமர்ப்பித்து உங்கள் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews