சென்னை ஐஐடி ஆன்லைன் Data Science பிரிவு தொடக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 09, 2021

Comments:0

சென்னை ஐஐடி ஆன்லைன் Data Science பிரிவு தொடக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை ஐஐடி ஆன்லைன் Data Science பிரிவு தொடக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு! சென்னை ஐஐடியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையான Data Science இல் புதிய படிப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 30ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் படிப்பு:
தரவு அறிவியல் என்பது அறிவியல் முறைகள், செயல்முறைகள், வழிமுறைகள் மற்றும் அமைப்புகளைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத தரவுகளிலிருந்து அறிவு மற்றும் நுண்ணறிவுகளை பிரித்தெடுப்பதாகும். தரவு அறிவியல் சுரங்கம், இயந்திர கற்றல் மற்றும் பெரிய அளவிலான தரவுகள் தொடர்பான துறையாகும். 2026 ஆம் ஆண்டில் 11.5 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள, வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று தரவு அறிவியல் துறை. 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த படிப்பில், முதல் ஆண்டில் இந்தியா முழுவதும் பல்வேறு படிப்புகளை முடித்த 8,154 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில், 70-க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள், நிறுவனர்கள், இயக்குநர்கள் மற்றும் நிறுவனங்களின் துணைத் தலைவர்கள், இஸ்ரோ மற்றும் சிஎஸ்ஐஆர் பணியாளர்கள் மற்றும் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் சேர்ந்து படிக்கின்றனர். அந்த அளவிற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த துறையாக இது உள்ளது. ஆன்லைன் வழியில் கற்பிக்கப்படும் இந்த படிப்பில், தேசிய கல்விக் கொள்கையின் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதன்படி, அடிப்படைப் பட்டம் (Foundation Programme), டிப்ளமோ பட்டம் (Diploma Programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme) என்ற மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. மாணவர்கள் எந்த நிலையிலும் படிப்பில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியேறும் நிலையின் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில், ஐஐடி சென்னை வழங்கும் ஆன்லைன் பாடத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த துறையில் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 30ம் தேதி இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews