CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு!
இந்திய அளவில் சிபிஎஸ்இ தனித் தேர்வுகளுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தேர்வுகள் துவங்கப்பட உள்ளது.
சிபிஎஸ்இ தேர்வுகள்:
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா என்ற நோய்த்தொற்று மிகவும் வேகமாக பரவி மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது மாணவர்கள் தான். இதனால் அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்கள் அனைவருக்கும் முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி சதவீதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் போதவில்லை என்று நினைத்தால், அவர்களுக்கு தனியாக தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தேர்வாணையம் தெரிவித்திருந்தது. அந்த மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. தற்போது இந்த தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் தனித்தேர்வர்கள், மதிப்பெண்களால் திருப்தி அடையாமல் மீண்டும் எழுத வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆங்கிலம், உடற்கல்வி, வணிகம், கணக்கியல், வேதியியல், அரசியல் அறிவியல், உயிரியல், பொருளாதாரம் சமூகவியல், கணினி அறிவியல், கணிதம், இந்தி, புவியியல், உளவியல், வீட்டு அறிவியல், இயற்பியல் மற்றும் வரலாறு பாடங்கள் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதியும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 16 ஆம் தேதியும் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூடிய விரைவில் பதிவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.